Sakinaka rape-murder case : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மஹாராஷ்ட்ராவின் சகினாகா பகுதியில் 34 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த குற்றம் அரிதிலும் அரிதான பிரிவின் கீழ் வரும் என்று கூறி மோகன் சவுகானுக்கு (45) மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது. போலீசாரின் கூற்றுப்படி, மோகன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் கம்பியை செருகி மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விரைந்து செயல்பட்ட காவல்துறை குற்றவாளியை கைது செய்து வெறும் 18 நாட்களிலேயே குற்றப்பத்திரிகையையும் தாக்க செய்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த மே 30 அன்று கற்பழிப்பு மற்றும் கொலைக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அவருக்கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…