சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. கடந்த 25ம் தேதி தொடங்கிய கோடை விழாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்காடு கோடைவிழா நடத்தப்படாமல் இருந்ததால் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதனிடையே சேலம் ஏற்காட்டில் மலர் கண்காட்சியில் ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிடப்பட்டுள்ளது. 7 நாட்களில் மலர் கண்காட்சியை 72,387 பேர் சுற்றி பார்த்துள்ள நிலையில் ரூ.20 லட்சம் கட்டணம் வசூல் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…