Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

வாட்டர் ப்ரூப் போன்.. ஏமாற்றிய சாம்சங்.. அபராதம் விதித்த அரசு!!

Sekar June 23, 2022 & 15:40 [IST]
வாட்டர் ப்ரூப் போன்.. ஏமாற்றிய சாம்சங்.. அபராதம் விதித்த அரசு!!Representative Image.

ஆஸ்திரேலியாவின் போட்டி கட்டுப்பாட்டாளர் அமைப்பு, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது சில ஸ்மார்ட்போன்களில் வாட்டர் ப்ரூப் அம்சம் குறித்து ஒன்பது தவறான விளம்பரங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 75 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது.

சாம்சங் ஆஸ்திரேலியா, அதன் சில கேலக்ஸி போன்களில் வாட்டர் ப்ரூப் அம்சம் குறித்து வாடிக்கையாளர்களிடம் பொய் சொல்லி தவறாக வழிநடத்தியதை ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மார்ச் 2016 மற்றும் அக்டோபர் 2018 க்கு இடையில், நிறுவனம் தனது விளாமரங்களில் தொலைபேசிகளை குளங்கள் அல்லது கடல் நீரில் பயன்படுத்தலாம் என்று கூறியது.

ஆனால் அப்படி பயன்படுத்திடும்போது ஸ்மார்ட்ஃபோன்கள் சரியாக செயல்படவில்லை அல்லது தண்ணீரில் போட்ட பிறகு வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக பயனர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான புகார்களைப் பெற்றது.

இந்த பொய்யான விளம்பரங்கள் மூலம் சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட மொபைல் பிராண்டுகள் விற்பனை விறுவிறுவென அதிகரித்தன. மக்களிடம் ஆசை காட்டி சாம்சங் நிறுவனம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

சாம்சங் நிறுவனமும் தனது தயாரிப்புகளில் தவறு உள்ளதை ஒப்புக்கொண்டதை அடுத்து பொய் விளம்பரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றியதாக இந்திய மதிப்பில் ரூ.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சாம்சங் ஆஸ்திரேலியா நிறுவனம் தனது புதிய, தற்போதைய மாடல்களில் இந்த பிரச்சினை இல்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்