நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்திலிருந்து மூன்றாவது பெட்டியில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பயணிகள் அபாய சங்கிலியை இழுத்ததால், ஒடிசாவின் பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர், உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டு சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், மீண்டும் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் புறப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…