திருப்பூர்: காயிதே மில்லத் நகர் பகுதியில் அமையவிருந்த சுத்தகரிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இரண்டு முறை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சுத்தரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களை இன்று திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நேரில் சந்தித்து இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் இத்திட்டத்தினால் தாங்கள் அச்ச நிலையில் இருப்பதால் இத்திட்டம் மாற்று இடத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதே இடத்தில் நிறைவேற்றக்கூடாது என ஒருமித்த குரலாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு,இத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறிய நிலையிலும், அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இத்திட்டம் மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த இடத்தில் போடப்பட்ட மதிப்பை விட கூடுதல் மதிப்பீட்டில் மாற்று இடத்தில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…