Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி ஏன்?

Nandhinipriya Ganeshan Updated:
கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி ஏன்?Representative Image.

கர்நாடகாவில் 5 நாட்கள் இழுபறிக்கு பிறகு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே.சிவக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வரும் மே 20 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 

கர்நாடக தேர்தல் 2023:

கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்ததையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பு வகித்தார். தற்போது 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சுயேட்சைகள் சேர்த்து மொத்தம் 2613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில், கடந்த மே 13ஆம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக படுதோல்விடையந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி வெற்று தனி மெஜாரிட்டியையும் பெற்றது. கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றிபெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று உறுதியானது.

அடுத்த முதல்வர் யார்?

இப்படி இருக்கையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வார் யார்? என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, இந்த முதல்வர் பதிவிக்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டிகே சிவக்குமார் என இரண்டு பேரின் பெயரும் டாப் லிஸ்ட்டில் இருந்தன. அதன்படி, சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் 46 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் 1.21 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். 

இருப்பினும், கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இவர் 2013 முதல் 2018ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர். இந்த சமயத்தில் இலவச ரேஷன் அரிசி திட்டம், ஷீரா பாக்யா எனும் பால் வழங்கும் திட்டம் உள்பட ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. அதுமட்டுமல்லாமல், ஊழல், முறைகேடு புகார் என எதிலும் அவர் சிக்கவே இல்லை. மேலும், இவருக்கு எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தினரிடம் செல்வாக்கு ஏராளம். 

டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி ஏன்?

மாறாக டிகே சிவக்குமாருக்கு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே சொல்லப்பட்டது. ஏனென்றால், டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சிக்காக நன்றாக உழைத்துள்ளார். மேலும் அவர் சார்ந்த ஒக்கலிகர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஓல்டு மைசூர் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை 37 இடங்களில் வெற்றி பெற வைத்துள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில் பிற மாநில எம்எல்ஏக்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்றும் வகையில் கர்நாடகாவில் பாதுகாப்பாக வைத்து கட்சி மேலிடத்தின் குட்புக்கில் உள்ளார். 

இவை அனைத்தும் டிகே சிவக்குமாருக்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும், டிகே சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை உள்பட பல விசாரணை அமைப்புகளில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒருவேளை முதல்வர் பதவி அவருக்கு வழங்கும் பட்சத்தில் அவர் உடனடியாக கைது கூட செய்யப்படலாம் என காங்கிரஸ் மேலிடம் அஞ்சியது. எனவே, டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவிக்கு பதில் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. அதன்படியே, தற்போது சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்