சீன மக்களை பதற வைக்கும் அந்த ஒரு வார்த்தை "போராட்டம்". அதை முறியடிக்க தனி ஒருவர் சீன அரசாங்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தால் சீன மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதிபர் ஜி ஜின்பிங்கை எதிர்த்தும், விமர்சித்தும் பெய்ஜிங்கில் அடையாளம் தெரியாத ஒரு நபர் வித்தியாசமாக போராட்டம் நடத்தி வருகிறார். ஹைடியன் மாவட்டத்தில் உள்ள சிடோங் பாலத்தில் ஏறி, சீனாவின் கடுமையான ஸிரோ கோவிட் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், திரு ஜியை அதிபர் பதவியில் இருந்து விலக்கவும் என்றும் இரண்டு பேனர்களை கட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் டயர்களை எரித்தும் தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார். யார் அந்த நபர்? என்ற தேடுதலை தொடங்க வைத்த சம்பவம் மற்றும் சீன மக்கள் அவரை பாராட்டியும் வருகின்றனர்.
1989 ஆம் ஆண்டு tiananmen square என்ற இடத்தில சீன மக்கள் தங்களுக்கு ஜனநாயக நாடு வேணும் என்று தங்களின் குரலை எழுப்பி வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூட, "ஜனநாயகம் வேண்டும், ஊழல் இருக்க கூடாது, பேச்சு சுதந்திரம் வேண்டும்" என்று அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர். எப்படி இருந்தாலும் சீன அரசு நம்முடைய குரலுக்கு செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
ஆனால் சீன அரசோ போருக்கு பயன்படுத்தும் மிலிட்டரி டாங்குகளை அனுப்பியது. எந்த ஆயுதமும் இன்றி அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கண்மூடி தனமாக சுட ஆரம்பித்தது. இரவு முழுவது மக்களின் அழு குரல், எங்கு பார்த்தாலும் ரத்தம் என்று அன்று முழுக்க மரண ஓலை கேட்டது. பின்னர் சீன அரசு போராட்டம் முடிந்து, 200 பேர் மரணமடைந்ததாக உலக நாடுகளுக்கு தகவல் தந்து. ஆனால் மற்ற நாடுகளோ அது பொய், ஏறத்தாழ 10,000/-க்கு மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொல்ல பட்டிருக்கலாம் என்று கூறினார்கள்.
பின்னர் அந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரசு அளித்துக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. அங்கு அன்று என்ன நடந்தது என்று அந்த ஆண்டில் இருக்கும் மக்களுக்கும் அரசுக்கு மட்டுமே தெரியும் என்று கூறுகின்றனர். இப்படி நடந்த பயங்கரத்தால் சீன மக்களுக்கு போராட்ட வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு பின்னர் சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு தனி நபர் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…