Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

ஜூலை-யில் 2 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் வேலை நிறுத்தம்....!

madhankumar June 30, 2022 & 18:18 [IST]
ஜூலை-யில் 2 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் வேலை நிறுத்தம்....!Representative Image.

ஓசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஜூலை மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் வியாழக்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:

ஓசூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர வாகன உதிரிபாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனங்கள், சுமார் 1,03,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிகிறது. குறிப்பாக படித்த மற்றும் படிக்காத கிராமப்புற இளைஞர்கள். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் போன்று அனைத்து தரப்பினருக்கும்
பணிகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக உள்ளது. 

மேலும் புதியதாக தொழில் முனையும் இளைஞர்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது. இதன்  வீழ்ச்சி சமூகத்தில் பல நிலைகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். தற்போது, இந்நிறுவனங்கள் கடும் சவாலான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி செலவு பன்மடங்கு பெருகி உள்ளது.

குறிப்பாக இயந்திரங்கள் கட்டுமான செலவு, மின்சாரம் , தொழிலாளர் ஊதியம், எரிபொருள் செலவு, மூலப்பொருட்களின் விலை மற்றும் பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா நெருக்கடியால் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.


எனவே, பெரிய தொழில் நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்கள் செய்து தரும் ஜாப் ஒர்க்கிற்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 13 14 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாகவும், இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் ரூ.500 கோடி  உற்பத்தி பாதிக்கப்படும் எனக் கூறினார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்