ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இளைஞர்களில் இரண்டாவது குற்றவாளி, கைது செய்யப்பட்டுள்ளதாக என்று போலீசார் தெரிவித்தனர். இவன் முதல்வர் கே சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் உள்ளூர் தலைவரின் மகன் ஆவார்.
சதுதீன் மாலிக் கைது.
மே 28 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது 17 வயது சிறுமி 5 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் மூவர் சிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இதில் தொடர்புடையவர்கள் எம்எல்ஏ மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் வாரிசு என கூறப்படும் நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மாநில உள்துறை அமைச்சரின் பேரனுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என போலீசார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பாதுகாப்பு கேமரா காட்சிகளின் கிளிப், சந்தேக நபர்கள் பப்பிற்கு வெளியே சிறுமியுடன் நிற்பதைக் காட்டுகிறது.
சிறுவர்கள் அவளை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி ஏமாற்றி காரில் அழைத்து சென்றுள்ளனர். ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஆள் அரவமற்ற பகுதியில் காருக்குள் வைத்து ஒவ்வொருவராக பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் தந்தையின் புகாரின் அடிப்படையில் போலீசார் முதலில் சாதாரண வழக்காக பதிவு செய்தாலும், பின்னர் அது பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது.
ஆளும் டிஆர்எஸ் செயல் தலைவரும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமராவ், இந்த வழக்கில் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு மாநில உள்துறை அமைச்சர், காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) மற்றும் ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதில் மாநில ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சியின் அரசியல் தொடர்புகள், குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
எனினும், காவல்துறை நேற்று ஒருவரை இந்த வழக்கில் கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவரை கைது செய்து வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்துவதாக ஆளும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…