Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

Spiritual tourism : ஆடி மாத ஆன்மீக சுற்றுலா...! தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு..!

Muthu Kumar July 08, 2022 & 14:40 [IST]
Spiritual tourism : ஆடி மாத ஆன்மீக சுற்றுலா...! தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு..!Representative Image.

Spiritual tourism : தமிழகதில் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தமிழகத்தில் ஆன்மீகரீதியாக முக்கியமாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் பேன்றவைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆடி மாதம் 17ம் தேதி தொடங்க உள்ளதால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அம்மன் தரிசன சுற்றுலா நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒருநாள் பயணமாக ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆன்மீக சுற்றுலாவில் காலையில் இருந்து இரவு வரை அப்பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்வது மற்றும் உணவு விலை அணைத்தையும் கணக்கிட்டு கட்டணத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்