தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கடந்த 05 ஆம் தேதி தொடங்கி கடந்த 28 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 06 ஆம் தேதி தொடங்கியது, இந்நிலையில் இன்று நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 936 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.
தரவு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் விசாரித்தபோது தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாகவும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் நல்ல மதிப்பெண் வரும் என நம்புகிறோம் எனவும் கூறினார்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதிமுதல் நடந்துவந்த தேர்வானது இன்றுடன் நிறைவடைவதனால் மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக வெளியே வந்தனர். சில மாணவர்கள் மகிழ்ச்சியாக துள்ளி குதித்தனர், மேலும் சில மாணவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவமும் நடந்தது. 10, 12ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு முடிந்துள்ள நிலையில் நாளை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…