தமிழகத்தின் மர்மமான சிறை தற்கொலைகளில் ஒன்றாக கருதப்படும் ராம்குமார் தற்கொலை விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் ராம்குமாரின் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், திடீரென மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தற்கொலை அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை நீண்ட காலமாக விசாரித்து வந்த மனித உரிமைகள் ஆணையம் தற்போது தீர்ப்பு வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் தனது உத்தரவில், ராம்குமார் மரணத்திற்கு சிறை ஊழியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது என்றும் அரசுக்கு இதில் பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை என தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம் ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதோடு, சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதுமான அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…