ஆளுநராக ரவி செயல்படுவதற்கு தகுதி இல்லாதவராக இருக்கிறார் அவர் அரசியல் சாசனங்கள் அனைத்தையும் மீறி செயல்படுகிறார். ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்த போராட்டம் நடத்த ஒன்றிணைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும். மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் தனித்தனியே போராட்டம் அறிவித்துள்ளது.
ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்த போராட்டம் நடத்த ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்துகிறோம். ஆளுநராக ரவி செயல்படுவதற்கு தகுதி இல்லாதவராக இருக்கிறார் அவர் அரசியல் சாசனங்கள் அனைத்தையும் மீறி செயல்படுகிறார். சட்டமன்றத்தில் ஏதோ எதிர்க்கட்சி போல கூட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது மத்தியில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இதை தவிர வரும் ஜனவரி 18 ல் புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா சேகுவேரா மற்றும் சேகுவாராவின் பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா சென்னை வருகை தர உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை வரும் புரட்சியாளர் சேகுவேராவின் மகள் மற்றும் பேத்திக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
சோசலிச கியூபாவிற்கு தமிழக மக்களின் பேராதரவை தரும் சிறப்பு நிகழ்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நேற்று மத்திய அரசுக்கு மட்டுமே ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் மாநில அரசுக்கு எதிராக பயிற்சி பெறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை தூண்டி விடுகிறார் என குற்றச்சாட்டினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…