Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வக்காலத்து வாங்காதீங்க வானதி - கொந்தளித்த கே.பாலாகிருஷ்ணன்! 

KANIMOZHI Updated:
வக்காலத்து வாங்காதீங்க வானதி - கொந்தளித்த கே.பாலாகிருஷ்ணன்! Representative Image.

சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில்  அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை  வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவான சம்பவம். அரசு சார்பில் எடுத்த நடவடிக்கைகளை கட்சி சார்பில் பாராட்டுகிறோம். ஆனால் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது. 

 

முதலமைச்சர் சொல்லி இருப்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் கைது நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் எங்கள் எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியை எழுப்பி மதுரையில் வரும் 24ம் தேதி போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ்  அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது ஒரு செங்கல் கூட இன்னும் கட்டப்படவில்லை. ஒன்றிய அரசு உடனடியாக கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். மதுரையைச் சுற்றியுள்ள 10 மாவட்டங்களை திரட்டி வரும் 24ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.

 

ஆளுநர் அரசின் உரையை முறையாக படித்து சென்று இருந்தால் இப்போது பிரச்சனையே இல்லை. தமிழ்நாட்டு மக்களை, சட்டமன்ற மாண்புகளையும் அவமானப்படுத்திய ஆளுநருக்கு வானதி சீனிவாசன் வக்காலத்து வாங்க வேண்டாம். ஆளுநர்  வேண்டுமென்றே அரசை வம்புக்கு இழுப்பது போன்று செயல்படுகிறார்.

 

போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்க காரணமே அதிமுகவும் மோடியின் பாஜக அரசாங்கம் தான். அம்பானி மன்றம் அதானி துறைமுகங்கள் வாயிலாகத் தான் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன.

 

ஈஷா யோகா மையம் சமூக விரோத கூடாரமாக மாறி வருகிறது,ஜக்கி வாசுதேவ்,ஒன்றிய அரசு நாணயத்தின் இருபக்கம் செயல்படுகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீறப்பட்டு இருக்கிறது,எனவே தமிழக அரசு ஈஷா யோகா மையத்திற்கு சீல் வைக்க வேண்டும். எடப்பாடி அணியின் அதிமுகவிற்கு குருவாக பாஜக செயல்படுகிறது அவர்களை எதிர்க்கும் ஆளுமையை அதிமுக இழந்துவிட்டது" என தெரிவித்தார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்