Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் ஸ்டீல் மேன் மரணம்...இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

Priyanka Hochumin November 01, 2022 & 18:00 [IST]
இந்தியாவின் ஸ்டீல் மேன் மரணம்...இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!Representative Image.

இந்திய நாட்டின் ஸ்டீல் மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் ஜாம்ஷெட் ஜெ இரானி திங்கள்கிழமை (அக்டோபர் 31) இரவு ஜாம்ஷெட்பூரில் காலமானார். 86 வயதான இவர் உடல் நலக்குறைவால் மறைந்ததாக டாடா ஸ்டீல் தெரிவித்தது.

இந்த இரங்கல் செய்தியைப் பற்றி டாடா ஸ்டீல் வெளியிட்ட அறிக்கையில், " பத்மபூஷன் டாக்டர் ஜாம்ஷெட் ஜே. இரானியின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம். அவர் இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அன்போடு அழைக்கப்படும் நபர். அவரது குடும்பத்தினருக்கு டாடா ஸ்டீல் குடும்பம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது' என்று தெரிவித்துள்ளது.

இவர் ஜூன் 2, 1936 ஆம் ஆண்டு ஜி.ஜி. இராணி மற்றும் குர்ஷித் இரானி தம்பதிக்கு மகனாக பிறந்தார் ஜம்ஷெட் ஜே இரானி. பின்னர் 1963 இல் இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் லோகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பத்ம விபூஷன் ஜாம்ஷெட் இரானி தன்னுடைய தொழில் வாழ்க்கையை 1963 இல் பிரிட்டிஷ் இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி சங்கத்தில் தொடங்கினார்.

இவர் தன்னுடைய வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அதனால் 1968இல் இந்தியா திரும்பி, டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தில் (டாடா ஸ்டீல்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட் துறை இயக்குனரின் உதவியாளராக பணிபுரிந்தார். தன்னுடைய கடின உழைப்பால் 1985 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றார். 43 ஆண்டுகள் அவர் டாடா நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். டாடா ஸ்டீல் குழுமத்தில் இருந்து இரானி ஜூன் 2011 இல் ஓய்வு பெற்றார். இவரின் வாழ்க்கை வரலாறு நம்மை பிரமிக்க செய்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்