டெல்லியில் உள்ள பயிற்சி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த மாணவர்கள் 3வது மாடியில் இருந்து வயர்களை பிடித்து கீழே இறங்கி தப்பிக்கும் பதற வைக்கும் காட்சிகள் வௌியாகி உள்ளன.
டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள கட்டடத்தின் 3வது மாடியில் சமஸ்கிருத பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இன்று பிற்பகலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உள்ளே வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் மாணவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்கள் மையம் அமைந்திருந்த அறையின் ஜன்னல் வழியாக வயர்களை பிடித்து கீழே இறங்கினர். அப்போது சிலர் கை நழுவி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து 11 வாகனங்களில் தீயணைப்பு துறையினர் வந்தனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், சிக்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…