சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிக்க விமானம் நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய 98 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள், இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் சென்றபோது விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து, கட்டுப்பட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் விமானம் இழுவை வாகனத்தின் உதவியுடன் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் அனைவரும் ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர்.
பின்னர் 4 மணிக்கு புறப்படும் என தெரிவித்தனர், அதன் பின்னரும் விமானம் புறப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதோடு விமானம் இன்று பகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிங்கப்பூர் செல்ல வேண்டிய 98 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரமாக தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…