தமிழகத்தில் 10, 11ம்,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. மே இறுதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக முன்னதாக கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறந்த முதல் நாளே அரசு வழங்கு விலையில்லா நோட்டு புத்தகக்கண்கள், விலையில்லா சீருடைகள், ஆகியவற்றை பள்ளிகள் திறந்த முதல் நாளே விநியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த கல்வியாண்டு துவங்கப்படும் நாளில் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். அத்துடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். 11ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ம் தேதியும்,12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் நாளைய தினம் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவில்லை . பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டத்தை எப்போது தொடங்கலாம் என முதல்வரிடம் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…