பொருளாதாரத்தில், பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .
உச்சநீதி மன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியான யுயு லலித்துக்கு நாளைய தினம் கடைசி பணி நாள் என்பதால், இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்டது.
அதன் படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனத்தின் அமர்வில் பட்டியலிட்டு விசாரணை செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், EWS இட ஒதுக்கீடு தொடர்பான சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னரே, தலைமை நீதிபதி EWS ஒதுக்கீட்டை குறித்த மனுக்களில் நான்கு வெவ்வேறு தீர்ப்புகள் இருப்பதாகக் கூறினார். மேலும், தீர்ப்பை வாசித்த நீதிபதியான தினேஷ் மகேஸ்வரி, அரசியலமைப்பு திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீற முடியாது என கூறினார். அதன் படி, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில், தனித்தனியாக கட்டமைக்கப்பட்ட எந்த இட ஒதுக்கீடும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறாது எனக் கூறினார்.
அதன் படி, SC/ST/OBC பிரிவுகளில் உள்ள ஏழைகளை பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினரிடமிருந்து விலக்குவதன் மூலம், தடை செய்யப்பட்ட பாகுபாடுகளை இந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, தலைமை நீதிபதி லலித் உடன்பாடு தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் அறிவித்த இந்த தீர்ப்புக்கு பாஜக பொதுச் செயலாளர் பாராட்டு தெரிவித்தார். அதாவது, இது EWS இட ஒதுக்கீட்டின் சட்டப்பூர்வத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு மற்றொரு பெரிய வரவாகக் கருதப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…