Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தமிழக பிராமணர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து.. உச்சசமீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Sekar October 17, 2022 & 15:49 [IST]
தமிழக பிராமணர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து.. உச்சசமீதிமன்றம் அதிரடி உத்தரவு!!Representative Image.

தமிழகத்தில் அத்வைத சமய தத்துவத்தைப் பின்பற்றி வாழும் ஸ்மார்த்த பிராமணர்கள் தங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஸ்மார்த்த பிராமணர்கள் என்பவர்கள் தனி மதப்பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல, எனவே சிறுபான்மை அந்தஸ்து வழங்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.

முன்னதாக ஜூன் 7, 2022 அன்று சென்னை உயர் நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்) சட்ட பிரிவின் கீழ் ஸ்மார்த்த பிராமணர்களுக்கு சலுகை அளிக்க முடியாது என்று கூறியது.

உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், "ஸ்மார்த்த பிராமணர்கள் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ பொதுவான அமைப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. இது தமிழ்நாட்டின் பிற பிராமணர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தும் எந்த ஒரு தனித்தன்மையும் இல்லாமல் ஒரு சாதி/சமூகம் மட்டுமே.

எனவே, அவர்கள் தங்களை ஒரு மதப்பிரிவு என்று அழைக்க முடியாது. இதன் விளைவாக, இந்திய அரசியலமைப்பின் 26 வது பிரிவின் கீழ் பலன்களைப் பெற அவர்களுக்கு உரிமை இல்லை." என்று உயர் நீதிமன்றம் கூறியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்