Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..

Nandhinipriya Ganeshan October 14, 2022 & 13:02 [IST]
சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..Representative Image.

கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி என்ற பெண் ராம்குமார் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாததாலும், இருந்த சிசிடிவியும் இயங்காததாலும் கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவும், அவை தொடர்ந்து இயங்கவும் உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு தாம்பரம் இரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அந்த இளைஞரும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூகத்தில் பெரிய பரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த சம்பவங்கள் மறைவதற்குள், தற்போது மற்றொரு கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..Representative Image

அக்டோபர் 13,2022 ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளி கொலை செய்துள்ளது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை பள்ளி பருவம் முதல் கொண்டு காதலித்து வந்திருக்கிறார். பின்னர், கருத்துவேறுபாட்டினால் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. 

சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..Representative Image

இந்த நிலையில் சத்யாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமானதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்துக்கொண்ட சதீஷ், வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யாவிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சதீஷ், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயிலின் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் சத்யா. உடனே சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சுவாதி, சுவேதா, சத்யா: சென்னை ரயில் நிலையங்களில் தொடரும் கொலைச்சம்பவங்கள்.. குற்றமும் பின்னணியும்..Representative Image

இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சத்யாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பியோடிய சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். பின்னர், ஒருகட்டத்தில் சதீஷை கையும்களவுமாக கைதுசெய்துவிட்டனர். 

அதன்பின்பு, அக்டோபர் 14 ஆம் தேதி மகள் இறந்த துக்கத்தில் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு அவரும் உயிரிழந்துள்ளார். காதல் என்ற பெயரில் தற்போது 2 உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் பட்டபகலில் நிகழும் இளம்பெண்களின் கொடூர கொலை சம்பவங்கள் சென்னை வாசிகளிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்