Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

மோடி 2024 இல் வெல்வாரா..? சவால் விடுக்கும் நிதிஷ் குமார்!!

Sekar August 10, 2022 & 16:35 [IST]
மோடி 2024 இல் வெல்வாரா..? சவால் விடுக்கும் நிதிஷ் குமார்!!Representative Image.

பீகாரில் 8வது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், 2024 பாராளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற முடியாது என சவால் விடுத்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நேற்று திடீரென பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் சூட்டோடு சூட்டாக மாநிலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பல கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தார்.

அதன் படி இன்று மீண்டும் 8வது முறையாக முதல்வராக பதவியேற்றார். லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக, 2014இல் தேசிய அளவில் மோடியின் எழுச்சியால் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அவர், 2017 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவு சரியில்லை எனக் கூறப்படும் நிலையில், இப்போது மீண்டும் பாஜகவை தனியாக விட்டுவிட்டு எதிர் முகாமில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இன்று முதல்வராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக தனக்கு ஆசையில்லை என்றும், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றேன் என்றும் கூறினார்.

மேலும் 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமரான நிலையில், வரவுள்ள 2024 தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா என நிதிஷ் குமார் சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்