வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனவால் பார்வையாளகர்கள் வருகை குறைந்திருந்த நிலையில் தற்போது அது பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியாக கொம்பி-கவுரிக்கும் கடந்த ஆண்டு குட்டி ஒன்று பிறந்தது. இத குட்டிக்கு பூங்கா ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து ஆதித்திய என பெயர் வைத்தனர். இந்த குட்டியானது, தனது தாயிடம் செய்யும் சேட்டைகள் மக்களை கவர்ந்து வந்தது. இந்த குட்டியை தாய் குரங்கு எப்போது தன்னுடனே வைத்துக்கொள்ளும்.
இந்நிலையில் இந்த குரங்கு குட்டிக்கு நேற்று முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை பூங்கா ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
அந்த கேக்கில் முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதித்யா என எழுதப்பட்டிருந்தது. பின்னர் குரங்கிற்கு பிடித்த உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது, அதனை ஆதித்யா குரங்கு முதல் அணைத்து குரங்குகளும் ருசித்து சாப்பிட்டன. இந்த விடியோவை வண்டலூர் ஜூ ஊழியர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…