India : மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு தமிழ் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ராணுவம், விமானம், கப்பற்படை என முப்படைகளுக்கும் தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணயாற்றும் வகையில் அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளு்கு மட்டும் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், அவர்கள் 4 ஆண்டு பணிக்கு பிறகு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பாஜக ஆளும் மாநில அரசுகளில் உள்ள வீரர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய மாநிலங்களில் கடும் வன்முறைகள் வெடித்தன. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டகாரர்கள் ரயில்களை எரித்தனர். இதனால் இந்தியா முழுவதும் பதட்டமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், ஒளிப்பதிவாளரும் தமிழ் நடிகருமான நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன். தேசமே தெய்வம்” என குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…