Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துறை வார்னிங்... 

Nandhinipriya Ganeshan [IST]
ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துறை வார்னிங்... Representative Image.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்  இலவசமாக பயணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் இலவசமாக பயணம் செய்வதால் பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை போக்கும் வகையில் போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 

ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்குரிய  மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் . 

ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க  வேண்டும். மாற்று வழித்தடத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். 

அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் வேண்டும்.

அதே போல் வழியில் வரும்  பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.  பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது. 

நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கட்டணங்களுக்குரிய பயணச்சீட்டுக்களை வசூலிக்க வேண்டும். 

பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளும் வழங்கப்பட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது.

பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்புக்களை அறவே தவிர்த்தல் வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்