இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் வட கிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் ஒக்கி, கஜா, வர்தா போன்ற புயல்கள் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மிகப்பெரிய புயல் வருவதற்கு முன்னரே அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…