மறைந்த கருணாநிதியின் மறைவிற்குப் பின், தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். இவர் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் சட்டசபைத் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது தி.மு.க. பின், இந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 9 ஆம் நாள் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர், பொருளாளர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். மேலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர்.
மேலும், இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இவர்கள் போட்டியின்றி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 9 ஆம் நாள் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் புதிய துணைப் பொதுச் செயலாளராக மக்களவை உறுப்பினர் கனிமொழி நியமிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, தி.மு.க பொதுக்குழு கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். ஆனால், இந்த முறை பொதுக்குழு கூட்டம் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…