Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?

Gowthami Subramani October 08, 2022 & 10:45 [IST]
அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image.

ஆன்லைன் சூதாட்டத்தினால், சிலர் உடைமைகளையும், உயிரையும் பலி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமீப காலமாக, ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் மோசடிக்கு உள்ளாவதுடன், உயிரையும் மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான நிலை உருவாகி உள்ளது. தொடர்ந்து, பள்ளி மாணவன் உட்பட வேலை செய்யும் நபர்கள் வரை இந்த விளையாட்டுகளை விளையாடி பணத்தை இழந்து, பிறகு கடுமையான மனநிலைக்கு உள்ளாகின்றனர். இன்னும் சிலர் ஆன்லைன் மூலம் ஆப்களில் கடன் பெற்று, அதனை திருப்பச் செலுத்த முடியாமலும் கடுமையான அவதிக்கு உள்ளாகின்றனர். ஆன்லைன் ஆப்கள் மூலம் லோன் பெறுவதற்கான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image

அமைச்சரவை ஒப்புதல்

அதன் படி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்கும் வகையில், சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியான கே.சந்துரு அவர்களின் தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசு அறிக்கை பெற்றது.

அதன் படி, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த செப்டம்பர் 26 ஆம் நாள் அன்று கூடிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image

கவர்னர் பரிந்துரை

இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 1 ஆம் நாள் கவர்னர் அலுவலகத்திற்கு அரசு இதனை அனுப்பி வைத்தது. அன்றைய தினமே, இந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களால் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பப்பட்டது.

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image

அரசாணை வெளியீடு

இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி அன்று, அரசிதழில் இந்த அவசர சட்டத்திற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதில் கூறியவாறு,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் மூலம் விளையாடுபவர்களுக்கு பண ஆசை காட்டி அதில் அடிமைப்படுத்தும் வகையில் இருப்பதாலும், இதனால், உடல், மன நலன் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில், குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் உருவாவதுடன், அவர்கள் திறன் குறைந்து வருகிறது.

இதனால், நீதிபதி சந்துரு தலைமையிலான அறிக்கையும், சர்வே அறிக்கையும், பொதுமக்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் அரசு பரிசீலித்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகலை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

தற்சமயம், சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத காரணத்தினால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதன் படி, புதிதாக உருவான இந்த சட்டத்தின் பெயர், “தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை அவசர சட்டம் – 2022” ஆகும். இந்த சட்டத்தின் படி, இந்த ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற மற்றூம் தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக நிர்ணயிக்கப்படுவார். மேலும், ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் போன்றோர் உறுப்பினர்களாக இருப்பர்.

இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தும் மற்றும் அதனை வழங்குபவர்களை கண்காணிக்கும். இந்த விளையாட்டுகளை வழங்கும் நபர்களின் பற்றிய தரவுகளை சேமிக்கும்.

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம்

இந்த அவசர சட்டத்தின் மூலம், அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுமே தடை செய்யப்படுகிறது. அதன் படி, வெகுமதிகள் அல்லது பணம் வெல்லக் கூடிய வாய்ப்பு என ஆசை காட்டும் ரம்மி, போக்கர் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image

மீறினால் கிடைக்கும் தண்டனைகள்

இந்த ஆணையையும் மீறி, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் நபர்களுக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது அபராதத்துடன் சேர்த்து சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பாக விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை… மீறினால் என்ன தண்டனை தெரியுமா..?Representative Image

தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால்

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களைச் செய்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தவறு செய்தார் எனில், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுன், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கியவர் தண்டனை அனுபவித்து, மீண்டும் தவறு செய்தால் அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறை தண்டனையாகவும், 20 லட்சம் அபராதமாகவும் நீட்டிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்