Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்.. மீண்டும் கனமழை கொட்டப் போகுது!!

Sekar November 19, 2022 & 10:28 [IST]
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்.. மீண்டும் கனமழை கொட்டப் போகுது!!Representative Image.

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கொட்டித்தீர்த்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்து காணப்பட்டது. தற்போதைக்கு தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளதோடு, தமிழகத்தில் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்