பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பனி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டத்தை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தவாறே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…