Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 History

Gowthami Subramani Updated:
காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 HistoryRepresentative Image.

காதலர் தினம் வந்துவிட்டாலே ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள உற்சாகத்தை வெளிக்கொணர்வர். காதலர் தினம் என்பது ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவது அல்ல. வாரம் முழுவதும் 7 நாள்கள், ஏழு சிறப்பு தினங்களை எடுத்துக் கூறுகிறது. இந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. காதலர்களுக்காக கொண்டாடப்படும் காதலர் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுவது டெடி தினம் ஆகும். இந்த தினத்தில் காதலர்கள் டெடி பியரை பரிசாக வழங்குவர். இந்த டெடி தினம் ஏன் காதலர் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுகிறது எனவும், டெடி தினத்தின் சிறப்பம்சங்களையும் பற்றி இதில் காண்போம்.

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 HistoryRepresentative Image

டெடி தினம் 2023

ஒவ்வொரு ஆண்டும் காதலர் வாரத்தின் நான்காவது நாளாக டெடி தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி, பிப்ரவரி 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே எனத் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த தினத்திற்கென தனிச்சிறப்பு உண்டு. மென்மையான தினத்தில் மென்மையான டெடி பியர்களை காதலர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்வர்.

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 HistoryRepresentative Image

டெடி தினம் கொண்டாடுவதற்குக் காரணம்

டெடிபியர் ஆனது, மென்மையான பொம்மை வகைகளைச் சார்ந்ததாகும். இந்த டெடிபியரை ஒருவர் நீண்ட காலம் நம்முடன் வைத்திருக்க முடியும். ஆண்களை விட, பெண்களே டெடி பியரை அதிகம் விரும்புவர். இது எப்போதும் நம்முடனே இருப்பதால், டெடிபியரை வழங்கியவர்கள் அதிக அளவு நம் நினைவுக்கு வருவர். மேலும், தூங்கும் போது டெடி பியரைக் கட்டிபிடித்து தூங்குவதென்பது பெண்களின் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது.

காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே! அது ஏன் தெரியுமா..? | Teddy Day 2023 HistoryRepresentative Image

காதலர்களுக்கான டெடி பியர்

டெடி டே ஆனது, முதன் முதலில் மேற்கத்திய நாடுகளிலேயே பிரபலமானது. அதன் பின்னரே, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் காதலர் வாரத்தின் ஒரு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலர்கள் டெடி பியர்களைப் பரிசாகக் கொடுத்து, தங்களது காதலை வெளிப்படுத்துவர். இதனுடன், காதல் வரிகளை எழுதியோ அல்லது பாராட்டுக்களைப் பகிர்ந்தோ தங்கள் அன்பை வெளிப்படுத்துவர். இது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் சிறப்பான நாளாகும்.

இந்த சிறப்பான தினத்தில் டெடி பியரைப் பரிசாகக் கொடுத்து காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். அனைவருக்கும் இனிய டெடி தினம் நல்வாழ்த்துக்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்