Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

144 தடையுத்தரவு அமல்.. ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலையால் பதற்றம்!!

Sekar June 01, 2022 & 11:21 [IST]
144 தடையுத்தரவு அமல்.. ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலையால் பதற்றம்!!Representative Image.

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ராஜஸ்தானின் சித்தோர்கர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 

காவல்துறை வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின்படி, இறந்தவர் சித்தோர்கர் நகரின் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ரத்தன் சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாஜக முன்னாள் கவுன்சிலர் ஜெகதீஷ் சோனியின் மகன் ஆவார்.

முன்னதாக சித்தோர்கர் நகரின் சிவாஜி வட்டத்தில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் ரத்தன் நேற்று இரவு தாக்கப்பட்டார். அவர் மேல் சிகிச்சைக்காக உதய்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியானதும், மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த சுபாஷ் சவுக்கில் கூடி, காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உள்ளூர் பாஜக எம்பி சந்திர பிரகாஷ் ஜோஷி மற்றும் பாஜக எம்எல்ஏ சந்திரபான் சிங் ஆகியோர் கோட்வாலிக்கு வந்து, குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை எதிர்த்து ஜோஷியும் சிங்கும் இன்று சித்தோர்கரில் முழு பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரீத்தி ஜெயின் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்