Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
0.00sensex(0.00%)
நிஃப்டி22,405.60
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

தொடங்கியது ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்..!

madhankumar May 22, 2022 & 11:30 [IST]
தொடங்கியது ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்..!Representative Image.

நூல் விலை உயர்வை கண்டித்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 15 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருளான நூலின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருவதால், அதனை சார்ந்து இயங்கும் தொழில்கள் உட்பட பல்வேறு தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, நூல் விலை ஏற்றத்தை கண்டித்து, கடந்த 16, 17ம் தேதிகளில் ஜவுளி துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் தொடர்ச்சியாக, நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப் படுத்த வலியுறுத்தியும், இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி, ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மேலும் இதன்மூலம் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ளன. இதனால், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்