உலகின் மிகப்பெரிய கண்ணுக்கு தெரியும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், கரீபியன் சதுப்புநிலக் காட்டில், மனித கண் இமைகளின் அளவு மற்றும் வடிவத்திற்கு வளரும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த பாக்டீரியாக்கள் 0.9 செ.மீ. நீளமுடையதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த வகை செல்கள் இதுவரை கவனிக்கப்பட்ட பாக்டீரியாக்களில் உலகத்தில் மிகப்பெரிய பாக்டீரியாக்கள் ஆகும். எஸ்கெரிச்சியா கோலி போன்ற மிகவும் பழக்கமான பாக்டீரியாவை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரிய அளவில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து கலிஃபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள கூட்டு ஜீனோம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நுண்ணுயிரியலாளர் ஜீன்-மேரி வோலண்ட் கூறுகையில்,
“எவரெஸ்ட் சிகரத்தின் அளவுள்ள மற்றொரு மனிதனை சந்திப்பது போல் இது இருக்கும்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…