கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் அஞ்சலை இவர் உறவினர்கள் யாரின் துணையுமின்றி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து கொலையாளி யார் என்பதையும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடந்து வந்தனர்.
ஆனால் கொலை நடந்த இடத்தில் இருந்த கைரேகை பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப்போகாததால் போலீசாருக்கு கொலையாளியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அஞ்சலையின் உறவினர்கள் யாரும் பணத்திற்காக கொலை செய்திருக்கலாம் என எண்ணிய போலீசார், விசாரணையை வேறு பக்கம் திருப்பினார், அப்போது கடைசியாக அஞ்சலையின் அண்ணன் மகன் சுரேஷ் இவர் தான் கடைசியாக அன்ஜலையின் வீட்டின் பக்கம் வந்துள்ளார்.
அவரின் செல்போன் சிங்கினாலும் அவ்வாறுதான் காட்டியுள்ளது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது குடிக்கு அடிமையான இவரின் மனைவி குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும், குடிக்க பணம் இல்லாமல் இருந்த இவர் தனது தந்தைஇடம் இருந்தது அவ்வப்போது பணத்தை திருடி குதித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவ்வாறு செய்ய முடியாததால் அத்தையிடம் சென்று கேட்கலாம் என வந்தவர், ஒரு கட்டத்தில் அஞ்சலையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 53 கிராம் தங்க நகைகளை எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டில் உள்ள புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். மது குடிப்பதற்காக சொந்த அத்தையையே கொலை செய்த அண்ணன் மகனின் செயல் புதுச்சேரியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…