கோவிலுக்குள் வைத்து பக்தர் ஒருவரின் மண்டையை அர்ச்சகர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பெரம்பலூர், வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வாலிஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலில் திருமண நாட்களில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் நேற்று பெளர்ணமி தினம் என்பதால் கடைசி வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது.
இந்நிலையில் நேற்று இந்த கோவிலில் 15க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. அப்போது பெரம்பலூர் அருகே ஒகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்ற பக்தர் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர் கோவில் வழக்கத்தை சுற்றி வந்து பிராத்தனை செய்ய முயன்றுள்ளார், அப்போது கோவில் அர்ச்சகரான செல்லப்பா நடை சாதபோகிறோம் நாளை வாருங்கள் என கூறியுள்ளார், இதனால் பக்தருக்கும் அர்ச்சகருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பா பக்தர் தலையில் தான் வைத்திருந்த தட்டை வைத்து ஓங்கி அடித்துள்ளார், இதில் பக்தரின் மண்டை உடைந்து ரத்தம் வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து ராகவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயம் பட்ட ராகவேந்திரன் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…