நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் ஆகியவை என நாள்தோறும் நடந்தவண்ணம் உள்ளன. இதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்புக்கலைகள் அவசியமானதாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பெண் ஒருவரை 6 ஆண்கள் சுற்றி வளைத்து துன்புறுத்துகின்றனர். ஆரம்பத்தில் சாதுவாக இருந்த அந்த பெண் கடைசியில் தன் ஜாக்கி ஜான் வேலையை காட்ட தொடங்கி விடுகிறார். காற்றில் பறந்து பறந்து அவர் அடிக்கும் ஒவ்வொரு பழைய விஜயகாந்த் படங்களை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த வீடீயோவை பார்த்த நெட்டிசன்கள் பெண்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தற்காப்பு கலையானது கற்பிக்கப்பட வேண்டும், அணைத்து பெண்களும் அவர்களது குழந்தைகளுக்கு தற்போது முதலே தற்காப்பு செய்வது எப்படி என கற்றுக்கொடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…