கன்னியாகுமரி மாவட்டத்தில் இறந்து பிறந்த குழந்தையை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் செவிலியர்கள் கழிவறையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கழிவறையில் குழந்தையின் சடலம் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இரணியல் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியை சேர்ந்த பீர் என்பவரின் மனைவி ஷிபானாவை நேற்று பிரசவத்திற்காக உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நேற்று இரவு ஷிபானாவுக்கு பிரசவம் நடந்துள்ளது.
பிரசவம் முடிந்தவுடன் செவிலியர்கள் குழந்தையை எடுத்து சென்றதோடு, குழந்தை குறித்து எந்த தகவலையும் உறவினர்களுக்கு சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் உறவினர்கள் குழந்தையை தேடியபோது, குழந்தை துணிகளால் சுற்றப்பட்டு மருத்துவமனை கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது தான் குழந்தை இறந்து பிறந்துள்ளது தெரிய வந்துள்ளது. தவறான முறையில் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்து பிறந்தது என்றும், அதை மறைக்கவே செவிலியர்கள் குழந்தையின் சடலத்தை கழிவறையில் கொண்டு சென்று வைத்தனர் என குற்றம் சாட்டி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குழந்தையின் சடலம் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…