மாண்டஸ் புயல் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பொதுமக்கள் புகார் அளிக்கும் வண்ணம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொடர்பு எண்கள் (1077) அறிவிக்கப்பட்டு புயல் மற்றும் கனமழை தொடர்பான பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
துணை ஆட்சியர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 10 ஒன்றியங்களிலும் கண்காணிப்பு பணிவுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளாதாக தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு புயல் வருவதற்கு வாய்ப்பு இல்லை இருந்த பொழுதிலும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்கள் தங்க வைப்பதற்கு தேவையான நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கண் விழித்திரை மூலமாக பொருட்கள் தொடங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது விரைவாக தமிழக முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வரும். பொங்கல் பரிசு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தமிழக முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் அரிசி கோதுமை ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…