Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் முதல்வர் அலுவலகத்தில் வேலை...இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

madhankumar May 25, 2022 & 12:30 [IST]
ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் முதல்வர் அலுவலகத்தில் வேலை...இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!Representative Image.

ரூ.75 ஆயிரம் சம்பளத்துடன் தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து 2 ஆண்டுகளுக்குப் பணியாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள  நீர் வளங்கள், அனைவருக்கும் வீடு வழங்குதல் திட்டம், விவசாய உற்பத்திகளை பெருக்குதல் மற்றும் சந்தைப்படுத்தல், சமூக உள்ளடக்கத்தை அடைதல், இணைப்புகளை உருவாக்குதல்,  கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதாரக் குறிகாட்டிகளை உயர்த்துதல்,  நிறுவன கடன் வசதி,  உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டை வழங்குதல்,பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையை அடைதல், தரவு நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகிய 12 பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் அரசின் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி முதல்வரின் ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் 2022 முதல் 2024 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் இன்று முதல் (மே 25) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 10 ஆகும். இந்தத் திட்டத்துக்காக ரூ.5.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தொழில்முறைப் படிப்புகளான பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் ஆகிய இளங்கலை படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகங்களில் கலை மற்றும் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • இதற்கான பணி அனுபவம்பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படும். மேலும் தமிழ்மொழி அறிவு கட்டாயம் வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப தேதியான மே 25 இல் இருந்து 22-30 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிருத்வி சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். மேலும் BC/MBC பிருத்வி சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 33 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலை தேர்வு (கணினி வழி).
விரிவான எழுத்துத்தேர்வு.
நேர்முக தேர்வு. 
ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பணிக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர்.

சம்பளம்:

பணியாளர்களுக்கு தலா ரூ.65,000 மாதாந்திர ஊதியம் மற்றும் அவர்களின் தற்செயலான செலவுகளைச் சமாளிக்க தலா ரூ10,000 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். எனவே மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக குடிப்பவர்களுக்கு பொது கொள்கை மற்றும் மேலாண்மை முதுகலைப் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

பணி விவரங்கள்:

தமிழக முதலமைச்சர் அலுவலகப் பணிக்குத் தேர்வாகும் பணியாளர்கள், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட நிரல்களைப் பற்றிய தரவு உந்துதல் முடிவெடுப்பதைக் கண்காணிப்பது, சிக்கல்களைக் கண்டறிவது போன்ற பணிகளை முதன்மையாக மேற்கொள்வர் இதனோடு களஆய்வு, கருத்துக்கள் பெறுதல், தீர்வு வழங்குதல், ஆகியனவற்றை செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி:

இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள்  https://tn.gov.in/tncmfp என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://www.tn.gov.in/tncmfp/notification.pdf


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்