சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை இடித்துவிட்டு சென்ற பள்ளி வாகனத்தை தடுத்து நிறுத்தி தட்டி கேட்ட ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண்ணை தனியார் பள்ளி வாகனம் ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனை பார்த்து அந்த வாகனத்தை மடக்கி அந்த டிரைவரை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக்கு காவலர் தண்ணி தாக்கியதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் போக்குவரத்து காவலர் ஒருவர், சாலையில் பலர் முன்னிலையில் தனியார் நிறுவன ஊழியரை அடிக்கும் காட்சி வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து முதல்நிலைக் காவலர் சதீசை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…