Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

Turkey earthquake 100க்கும் மேற்பட்டோர் பலி! சோகம்!

UDHAYA KUMAR Updated:
Turkey earthquake 100க்கும் மேற்பட்டோர் பலி! சோகம்!Representative Image.

துருக்கியின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஊரெங்கும் மரண ஓலமும், கூக்குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன. மிகப் பெரிய பொருட் சேதம் ஏற்பட்டிருக்கிறது.  மக்கள் வீதிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளன. நில நடுக்கம் காரணமாக அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 துருக்கி நாட்டுக்கு கிடைத்த சாபமோ என்னவோ தெரியவில்லை, வருடம் ஒருமுறையாவது இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது துருக்கி தேசம். இங்கு அடிக்கடி விபத்து, நில நடுக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டு மக்கள் உயிர், உடைமை சேதம் உருவாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புக்குள்ளானது.  கோய் நகரில் பல வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கி - ஈரான் எல்லையில் சுமார் 10 கிமீ ஆழத்தில் சில நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 123 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சோக நிகழ்வு நடந்து இரண்டு வாரங்களுக்குள் அடுத்ததாக மிகப் பெரிய அளவில் நிலநடுக்கம் துருக்கியை போட்டு அடிக்கிறது. 

Turkey earthquake 100க்கும் மேற்பட்டோர் பலி! சோகம்!Representative Image

அதிபயங்கர நிலநடுக்கம்!

அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்  துருக்கி - சிரியா எல்லையில் வீடுகள் குலுங்கியுள்ளன. பல கட்டிடங்கள் உடைந்து நொறுங்கியுள்ளன. பல நூற்றுக்கணக்கானோர் இடர்பாடுகளில் சிக்கியுள்ளனர். பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதுவரை 53 பேர்களின் உடல்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.  மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. 

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  அருகாமை நாடுகளான சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்