Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி துப்பாக்கி சூடு...17 போலீசார் மீது நடவடிக்கை...மாஸ்ஸாக அறிக்கை தாக்கல்!

Priyanka Hochumin October 18, 2022 & 16:00 [IST]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு...17 போலீசார் மீது நடவடிக்கை...மாஸ்ஸாக அறிக்கை தாக்கல்!Representative Image.

இன்று தமிழகத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்ய ஆணையம் வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22 அன்று போராட்டம் நடந்துள்ளது. அது அப்படியே கலவரமாகி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த கொடூர செயலை  கண்டித்து விசாரணை மேற்கொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 3000 பக்கம் கொண்ட அறிக்கையை 18 ஆம் தேதி அன்று தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.

அவர் மேற்கொண்ட விசாரணையில் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் அவர் கூறுவது, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்க கூறப்பட்டிருந்தது.

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மே 30, 2018 அன்று பாளையங்கோட்டை சிறையில் இறந்த மற்றும் ஆயுள் தண்டனை கைதி பிணையில் வெளிவந்த பரத்ராஜ் என்பவரது தாயாருக்கு, ரூ. 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை தர வேண்டும். மேலும் திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்வியும் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதால், தடையில்லா சான்று வழங்கவும், அரசாணை எண்.289, பொது துறை, நாள் 26.05.2021 மூலம் ஆணை வெளியிடப்பட்டது.

மேலும் ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் பொது மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கி சுட்டு நடத்திய காவல் துறையினர் வரம்பை மீறி செயல்பட்டுள்ளனர். இதில் காவல்துறையின் தலைமை ஒழுங்காக இல்லை மற்றும் மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார். எனவே, தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்