Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

இந்திய கோதுமைக்கு தடை.. ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி முடிவு!!

Sekar June 15, 2022 & 15:04 [IST]
இந்திய கோதுமைக்கு தடை.. ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி முடிவு!!Representative Image.

உலகின் இரண்டாவது பெரிய தானிய உற்பத்தியாளரான இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மற்றும் கோதுமை மாவினை அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்வதை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் தனது இந்த நடவடிக்கைக்கு உலகளாவிய கோதுமை வர்த்தகத்தில் தடங்கல்கள் இருந்தாலும், உள்நாட்டு நுகர்வுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியாவில் தேவை அதிகரித்ததால், மே 14 அன்று கோதுமை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது. எனினும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பும் நாடுகளுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொள்ளப்பட்ட நாடுகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி தடை விதிக்கப்பட்ட பிறகு, இந்த நாடுகளுக்கு 469,202 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது.

இந்தியா விலக்கு அளித்துள்ள நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் அடங்கும். இதன்படி ஐக்கிய அரபு அமீரகம் தனது உள்நாட்டு தேவைக்கு மட்டும் இந்திய கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள முடியும். 

இந்நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி தடை தொடங்கிய மே 13 க்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தாலும், மே 13க்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு கொண்டு வரப்பட்ட இந்திய கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் முதலில் பொருளாதார அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்