Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

விஜய் மாமா.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் வைரல் வீடியோ!!

Sekar October 29, 2022 & 17:48 [IST]
விஜய் மாமா.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் வைரல் வீடியோ!!Representative Image.

காஷ்மீரி பிரபல சமையல்காரர் சஞ்சய் ரெய்னாவின் சமீபத்திய சமூக ஊடக பதிவின் பின்னணியில் புதிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இடம்பெற்றிருக்கும் வீடியோ நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் சமையல்காரரின் மாமாவை, மாமா என்று குறிப்பிடும் வீடியோ தான் அது. இந்த வீடியோ அவரது மிகவும் ஆழமான இந்திய தொடர்பை காட்டுவதாக உள்ளது. 

இது இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் அவரது தீபாவளி வரவேற்பு மற்றும் கிங் சார்லஸ் அவருக்கு தீபாவளி இனிப்புகளை வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது.

செஃப் ரெய்னா, ரிஷி சுனக் உடனான தனது குறுகிய உரையாடலின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஜய் மாமா என ரிஷி சுனக் பாசத்துடன் எப்படி இருக்கீங்க என அளவளாவியதோடு, விஜய் மாமாவை 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கும் அழைத்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், யார் அந்த விஜய் மாமா என்று நெட்டிசன்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்