Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Dove Shampoo: டவ், டிரஸ்மீ ஷாம்புகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. புற்றுநோய் ஆபத்து.. 

Nandhinipriya Ganeshan October 26, 2022 & 13:20 [IST]
Dove Shampoo: டவ், டிரஸ்மீ ஷாம்புகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. புற்றுநோய் ஆபத்து.. Representative Image.

2021 அக்டோபர் மாதத்திற்கு முந்தைய தயாரிப்புகளான டவ் ஷாம்பு (Dove), நெக்சஸ் (nexus), சுவாவ் (Suave), டிரஸ்மீ (Tresemme), டிகி (Tigi) போன்ற ட்ரை ஷாம்பு பிராண்டுகளில் (Dry Shampoo) பென்ஜென் என்ற மூலப்பொருள் கலக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ப்ரே - ஆன் ட்ரை ஷாம்புகள் முடியை ஈரப்படுத்தாமல் சுத்தம் செய்யக்கூடியவை. 

இந்த ஷாம்புகளில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருளால் இரத்தப் புற்றுநோய், லுகிமேனியா நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இந்த ஷாம்புகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு அக்டோபருக்கு முன் தயாரிக்கப்பட்ட அனைத்து ட்ரை ஷாம்பு பிராண்டுகளையும் யுனிலீவர் நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நியூட்ரோஜினா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் பனானா போட், பியர்ஸ்சர்ப் காப்பர்டோன் ஆகிய பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களில் ரத்தப் புற்றுநோய், லுகிமேனியா உருவாக்கும் பென்ஜின் இருப்பது அமெரிக்காவின் கனெக்ட்கட் நகரில் உள்ள வலிசியூர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்