15 வருட போராட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள், பல சிறிய கடத்தல் நெட்வொர்க்களால் திருடப்பட்ட சிலைகள் உட்பட 307 பழங்காலப் பொருட்களை இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 33 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் எல் ப்ராக் ஜூனியர் இந்திய மக்களுக்கு கிட்டத்தட்ட 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 307 பழங்காலப் பொருட்களைத் திருப்பித் தருவதாக அறிவித்தார். அவற்றில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து கைப்பற்றப்பட்டவையாகும்.
ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளிலிருந்து பழங்கால கலை பொக்கிஷங்களை சுபாஷ் கபூர் கடத்தி விற்பனை செய்து வந்தவன் ஆவான்.
நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் துணை சிறப்பு முகவர்-இன்-சார்ஜ் டாம் லாவ் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வின்போது, அனைத்துப் பழங்கால பொருட்களும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
இந்திய மக்களுக்கு நூற்றுக்கணக்கான பொக்கிஷங்களை திருப்பித் தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று மாவட்ட வழக்கறிஞர் ப்ராக் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…