உத்தரபிரதேசத்தில் ராம்லீலாவின் போது சிவபெருமான் வேடத்தில் நடிதடுக்க கொண்டிருந்த ஒருவர் மேடையிலேயே உயிரிழந்தார்.
ராம்லீலா நாடகத்தில் சிவபெருமானை சித்தரிக்கும் நபர் ஒருவர் மேடையில் திடீரென சரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உ.பி.யின் ஜான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காணொளியில், சிவபெருமான் வேடமிட்டு, சிறுத்தை தோல் போன்ற ஒரு உடையில், திரிசூலத்தை பிடித்திருப்பதைக் காணலாம். மற்றவர்கள் வேண்டுவதையும், சிவனுக்கு அர்ச்சகர் தனது பிரார்த்தனைகளைச் செய்வதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து, சிவனாக நடிக்கும் நபர் திடீரென மேடையில் சரிவதைக் காணலாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி உட்பட அங்கிருந்து எழுந்து அவருக்கு உதவி செய்ய முயற்சிப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபெருமானாக நடித்துக் கொண்டிருந்தவர் மேடையிலேயே சரிந்து விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…