அமெரிக்காவும் ஜெர்மனியும் உக்ரைனுக்கு மேம்பட்ட நவீன ஆயுதங்களை வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு முக்கிய நகரத்தைக் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், உக்ரைன் நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகளிடம் கேட்டுக்கொண்டிருந்த மேம்பட்ட நவீன ஆயுதங்களை கொடுக்க அமெரிக்காவும் ஜெர்மனியும் முன்வந்துள்ளதாக ரானுவ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேர்மனி உக்ரைனுக்கு நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ரேடார் அமைப்புகளை வழங்குவதாகக் கூறியது, அதே நேரத்தில் அமெரிக்கா நான்கு அதிநவீன, நடுத்தர தூர ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் புதிய ராக்கெட்டுகளை ஏவாது என்ற உத்தரவாதம் கிடைத்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவதாகவும் மேற்கத்திய நாடுகளின் இந்த உதவி கடும் விளைவுகளை ஏற்ப்படும் என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பேசிய உக்ரேனிய ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் Andriy Yermak, எங்களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் உலக நாடுகள் வழங்கினால், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…