உத்திரபிரதேசத்தில் முட்புதருக்குள் வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை காப்பாற்றாமல், ஆண்கள் வட்டாரம் வெவ்வேறு கோணங்களில் போட்டோ, வீடியோ எடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேசம் கன்னோஜ் பகுதியில் இருக்கும் டாக் பங்களா விருந்தினர் மாளிகையின் பின்புறத்தில் 12 வயது சிறுமி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்தார். அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த ஆண்கள் பதறி போய் அந்த குழந்தையை காப்பாற்றாமல், சுற்றி நின்று ஒருவர் பின் ஒருவர் வந்து வெவ்வேறு கோணங்களில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் ஒருவர் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுக்க பலத்த காயத்தோடு, நகர முடியாமல் கைகளை தூக்கி உதவு கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளனர். ஆனால் இறக்க மற்ற அந்த கூட்டத்தினர் ஒருவர் கூட உதவிக்கு கரம் கொடுக்கவில்லை.
பின்னர் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு ஓடி போய் ஆட்டோவில் ஏறி மருத்துவமணியில் சேர்த்துள்ளார். சிறுமி காணாமல் போனதைப் பற்றி பெற்றோர்களிடம் கேட்ட போது, மதிய வேலையில் உண்டியல் வாங்குவதற்காக சிறுமி வெளியே சென்றுள்ளார், மாலை வரை வீடு திரும்பாததால் பயத்தில் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளாரா, இல்லை வேற என்ன நிகழ்ந்திருக்கும் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி கண் விழித்து சொன்னால் தான் தெரியும் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். அந்த சிறுமியோ உயிருக்கு போராடி ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
நம்முடைய நாடு எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது என்று இப்போது தெரிந்திருக்கும். 12 வயது சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது காப்பாத்த போகாமல், ஈவு இரக்கம் இன்றி வீடியோ எடுத்து மகிழும் இது போன்ற சம்பவங்கள் பெண்களை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…